search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய போட்டிகள்"

    • ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன.
    • இந்திய மகளிர் கால்பந்து அணியில் மூன்று தமிழக விராங்கனைகள் இடம்பிடித்தனர்.

    1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ம் தேதி துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

     

    இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில், ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழகத்தை சேர்ந்த சௌமியா, இந்துமதி மற்றும் சந்தியா என மூன்று வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள்: ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பந்தோய் சானு, அஷ்தலதா தேவி, ஸ்வீடி தேவி, ரிது ராணி, டால்மியா சிபீர், ஆஸ்டம் ஒரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியண்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமங், சௌமியா குகுலோத், தங்மேய் கிரேஸ், பியாரி சாசா, ஜோதி, ரேனு, பாலா தேவி, மனிஷா மற்றும் சந்தியா ரங்கநாதன்.

    ஆசிய போட்டிகளுக்காக பயிற்சி முகாமில் பங்கேற்ற கீதா போகத் மற்றும் அவரது சகோதரிகள் உட்பட 15 பேருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. #AsianGamescamp #GeetaPhogat
    புதுடெல்லி:

    மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர்கள் போகத் சகோதரிகள். குறிப்பாக கீதா போகத் மற்றும் பபிதா போகத் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை பெற்று தந்தனர்.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய போட்டிகள் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் இந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை அரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒழுங்கின்மை காரணமாக போகத் சகோதரிகள் உட்பட 15 பேர் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜி புஷன் சரண் சிங், 'தேசிய முகாமில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகள் மூன்று நாட்களில் நேரில் இங்கு நேரில் வர வேண்டும் எனக் கூறப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதனை நேரில் வந்து தனது பயிற்சியாளர்களிடம் கூறி தீர்வு காணலாம். ஆனால் கீதா போகத், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்கின் கணவர் சத்யார்த் கண்டியன் உட்பட 15 பேர் நேரில் வரவில்லை. மேலும், வராதது குறித்து எந்த தகவலும் கூறவில்லை. இது மிகப்பெரிய ஒழுங்கற்ற செயலாகும்.



    இதனால் இவர்கள் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளித்த பின்னர் தடையை விலக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்' என தெரிவித்தார்.

    இச்சம்பவம் குறித்து பேசிய பபிதா போகத், 'எனக்கு இரண்டு கால்களிலும் அடிபட்டுள்ளது. அதனால் நான் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. நான் இதுகுறித்து பெடரேசனுக்கு விளக்கம் அனுப்பியுள்ளேன்' எனக்குறிப்பிட்டார்.  #AsianGamescamp #GeetaPhogat

    ×